மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு…!

நடப்பாண்டில் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன்  வழங்கப்படும்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. சபாநாயகர் அப்பாவு தலைமையில், சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையடுத்து, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில், நடப்பாண்டில் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன்  வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.