9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி விடுவிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 விடுவித்தார் என்று மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில், 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2000 உதவித்தொகை என ரூ.18,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 9 கோடி விவாசாயிகளின் வங்கி கணக்குகளில் அடுத்த தவணைத் தொகையாக ரூ.18,000 கோடி செலுத்தப்பட்டது.

ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியை 3 தவணைகளாக வழங்கும் திட்டம் என்றும் முழுத் தொகையும் நேரடியாக விவசாயிகளின் கணக்குகளை செல்லும் எனவும் கூறியுள்ளார். இது விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்