“ரூபாய் 1,700,00,00,000 கடன் வாங்கி மோசடி” CBI வழக்குப்பதிவு..!!

புதுடெல்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளிடம் இருந்து ரூ.1,700 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த வி.எம்.சி நிறுவனத்தின் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் அந்நிறுவனத்தில் சி.பி.ஐ சோதனை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் சார்பில் தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் வி.எம்.சி என்ற நிறுவனத்தின் மீது அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, சி.பி.ஐ இந்த நடவடிக்கையை கையாண்டுள்ளது.
Image result for பஞ்சாப் நேஷனல் வங்கிஇந்த புகாரில் ஹைதராபாத் வி.எம்.சி நிறுவனம், பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் 593 கோடி ரூபாயும், பாரத ஸ்டேட் வங்கி, கார்ப்ரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் ஜே.எம் நிதி நிறுவனம் ஆகிய வங்கிகளிடம் இருந்து 1,207 கோடி ரூபாயும் கடன் பெற்று, அந்த கடனை திருப்பி செலுத்த வில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஹைதராபாத் வி.எம்.சி நிறுவனத்தின் இயக்குனர்களான உப்பலப்பட்டி ஹிமா பிந்து, உப்பலப்பட்டி வெங்கட் ராமராவ், பாக்வாடுலா வெங்கட் ரமணா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ, அவர்களின் மற்றும் வீடு அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment