கடந்த ஆண்டை விட இந்த வருட தீபாவளிக்கு ரூ.130 கோடி மது விற்பனை அதிகரிப்பு ..!

“மது நாட்டும் வீட்டுக்கும் கேடு ” என தெரிந்தும் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் போகிறதே தவிர குறைந்த பாடு இல்லை.இந்நிலையில் தமிழகத்தில் இந்த வருடம் தீபாவளி மது விற்பனை சென்ற ஆண்டை விட 130 கோடி அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 25-ம் தேதி மது விற்பனை ரூ.100.65 கோடியாகவும் , 26-ம் தேதி 183.18 கோடியாகவும் , தீபாவளி அன்று 172.31 கோடியும் மது விற்பனை வசூலாகியுள்ளது. இந்த மூன்று நாள்களில் தமிழகத்தில் மொத்தமாக 456.15 வசூல் ஆனது.
மது விற்பனை கடந்த ஆண்டு மது விற்பனையை விட 130 கோடி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி போது தமிழகத்தில் மது விற்பனை ரூ.325 கோடி வசூலானது என்பது குறிப்பிடதக்கது.

author avatar
murugan