துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்! எங்களை யார் எடுப்பது?

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பல தரப்பு மக்களும் பிராத்தனை செய்து வந்தனர். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 80 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 04.30 மணி அளவில் சிறுவன் சுர்ஜித்தை இறந்த நிலையில் மீட்புக்குழுவினர் மீட்டனர். குழந்தையின் இறப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி. சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது?’ என்று பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.