பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 ரொக்கம் இப்படி தான் வழங்க வேண்டும் – கூட்டுறவுத்துறை

பொங்கல் பரிசு தொகுப்பில் ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசியை விநியோகிக்க கூடாது என கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல். 

பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு மற்றும் சக்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக்கடைகளில் இன்று  முதல் 12-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனை அடுத்து தமிழக அரசு சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பில் ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசியை விநியோகிக்க கூடாது. இரண்டு 500 தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும் சில்லறை மாற்றி தரக்கூடாது.

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு அடிக்கு குறையாமல் கரும்பு கொடுக்க வேண்டும். கரும்பு  காய்ந்து போகாமல் இருக்க ஈர சாக்கை போற்றி வைக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment