ராய்லட்சுமி ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை உடைக்கும் படி இருக்கும் : இயக்குனர் வினோ வெங்கடேஷ்

By

நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் இயக்குனர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாக்கி வரும் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு பேய்ப்படம் ஆகும்.
இப்படம் குறித்து இயக்குனர் வினோ அவர்கள் கூறுகையில், ‘இது ஒரு பேய் படம் தான். ராய்லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை உடைக்கும் படி இருக்கும் என்றும், அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரை ஒரு கவர்ச்சி பதுமையாக பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் எதிர்பாராத தோற்ற மாற்றம் தரும் என்றும், நடிப்பிலும் அவருக்கு உரிய இடத்தை பெற்று தரும் படம் என்றும் கூறியுள்ளார்.

Dinasuvadu Media @2023