கோலியின் சாதனையை முறியடித்த ரோஹித்!

இந்திய கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த கோலியின் சாதனையை ரோஹித் முறியடித்தார்.

இந்திய கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த விராட் கோலியின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார். நேற்று நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அடித்த ஒரே சிக்ஸருடன், இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா மொத்தம் 60 சிக்ஸர்களைப் பதிவு செய்தார்.

ஷர்மா இந்த இலக்கை அடைய 34 இன்னிங்ஸ்களை எடுத்துள்ளார். அதே நேரத்தில் முன்னாள் கேப்டன் விராட் கோலி 50 ஆட்டங்களில் 59 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதுபோன்று எம்எஸ் தோனி அதிகபட்சகமாக 34 அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment