நம்பர் 7க்கு ஓய்வு… எம்.எஸ் தோனியை கெளரவித்த பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி செய்துள்ள பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு பிசிசிஐ ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 1998ம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

முதல் முதலில் பீகார் அணிக்காகக் களமிறங்கிய அவர், அடுத்து இந்திய அணியில் இடம் பிடித்து பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதில் குறிப்பாக, ஐசிசி கோப்பைகள் அனைத்தையும் வென்ற கேப்டன் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இந்த சூழலில், அடுத்தடுத்து, ஒருநாள், டி20, டெஸ்ட் என சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தல தோனி, தற்போது ஐபிஎல்-லில் மட்டும் விளையாடி வருகிறார்.

“நாங்கள் வெற்றி பெற்றிருக்கலாம்” எங்கே தவறு நடந்தது- எய்டன் மார்க்ரம் விளக்கம்..!

இதுவரை இபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங் அணி அவரது தலைமையில் 5 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி செய்துள்ள பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் ஜெர்சி நம்பர் 7-ஐ இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது. இதற்கு முன்னதாக 2017இல் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை கெளரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் 10-க்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது எம்எஸ் தோனியின் ஜெர்சி நம்பர் 7-க்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் 2004ல் தோனி அறிமுகமானதில் இருந்து விளையாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், குறிப்பாக அறிமுக வீரர்களின் ஜெர்சியில் நம்பர் 7 இடம்பெறாது. இதனிடையே, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்எஸ் தோனி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரது ஜெர்சி நம்பர் 7க்கு ஓய்வு அளிக்கவேண்டும் என தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்