குடியரசு தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகள் ஆலோசனை..! கலந்து கொண்டது யார்? புறக்கணித்தது யார்?

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்த நிலையில், டெல்லியில் ஆலோசனை கூட்டம். 

குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

அதன்படி தற்போது ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. மேலும் பிடிபி, ராஷ்ட்ரிய லோக்தளம், சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.  ஆம் ஆத்மி, டிஆர்எஸ், சிரோன்மணி அகாலிதளம், தெலுங்குதேசம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment