நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை வழக்கு – அடுத்த வாரம் ஒத்திவைப்பு

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யகோரிய வழக்கை நவம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யகோரிய வழக்கை நவம்பர் 11-ஆம் தேதி ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்படும் என அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் கடந்த மே 18-ஆம் தேதி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. இதனை சுட்டிக்காட்டி தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி உள்ளிட்ட 6 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த சமயத்தில் உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்படும்  என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யகோரிய வழக்கை அடுத்த வாரம் வெள்ளிக் கிழமைக்கு உச்சநீதிமன்றம் நீதிபதி பிஆர் கவாய் அமர்வு ஒத்திவைத்தது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment