#Breaking:தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே மாதிரியான தளர்வுகள்- மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை…!

தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து,  சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், ஏற்கனவே 27 மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாமா?, எனவும், கடைகள் திறப்பு நேரத்தை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில்,கொரோனா தொற்று குறைந்துள்ளதால் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களை ஒன்றாக இணைத்து,அனைத்து மாவட்டங்களில் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.