மின் கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறை – அமைச்சரவை ஒப்புதல்!

மக்கள் சிரமமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்காக ரீசார்ஜ் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நேற்று பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து பேசப்பட்டதுடன் மின் கட்டணம் குறித்த முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. மின் இழப்புகளை குறைப்பது, நுகர்வோருக்கு தரமான மற்றும் நம்பகமான மலிவான விலையில் மின்சாரத்தை வழங்குவது குறித்த திட்டம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த திட்டம் என்னவென்றால் விவசாய மின் இணைப்பு தவிர்த்து மற்ற அனைத்து நுகர்வோருக்கும் ப்ரீபெய்ட் மீட்டர் பொருத்தப்பட்டு முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து அதை பயன்படுத்தும் முறையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு புதிய ரீசார்ஜ் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதலும் வழங்கியுள்ளது. மின்சார இணைப்பு கொண்ட நகரங்கள், அனைத்து யூனியன் பிரதேசங்கள் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சிறு, குறு தொழிற்சாலை, வர்த்தக மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் மற்றும் அதிக மின்சாரம் இழப்பு உள்ள பகுதிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து இந்த மீட்டர் பொருத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal