மீண்டும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு – எந்த மாநிலத்தில் தெரியுமா?

மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே மத வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள்  பயன்படுத்துவது தொடர்பாக பிரச்சினைகள் எழுந்து வருகிறது. இன்று உதைத்தார் பிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதியுடன் மட்டுமே ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத வழிபாட்டு தலங்களில் தற்போது ஒலிபெருக்கிகளின் ஒலி அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 30 ஆம் தேதிக்குள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் மத வழிபாட்டு தலங்களிலிருந்து அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன் பயன்படுத்தப்படுவதற்கு ராஜ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தற்போது இது தொடர்பான சர்ச்சை எழுந்து வரும் நிலையில், அவுரங்காபாத் மாவட்டத்தில் மே 9-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அவர்கள் ஒலிபெருக்கி தொடர்பாக சர்ச்சையைக் கிளப்பி வருவதுடன், அவர் மே ஒன்றாம் தேதி பேரணி ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளார். இதனை தடுக்கும் விதமாக தான் அவுரங்காபாத் பகுதியில் 144 தடை உததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Rebekal