#IPL2022: இறுதி ஓவரில் 23 ரன்கள்.. பெங்களூர் அணிக்கு 170 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி, 169 ரன்கள் குவித்துள்ளது. 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது.

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடையப்பெற்று வரும் 13-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் களமிறங்கினார்கள்.

நிதானமாக ஆடிவந்த ஜெய்ஸ்வால் 4 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து படிக்கல் களமிறங்கினார். அவருடன் பட்லர் இணைந்து சிறப்பாக ஆடினார்கள். அதிரடியாக ஆடிவந்த படிக்கல், 37 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, சஞ்சு சாம்சன் களமிறங்கினார். அவர் பட்லருடன் இணைந்து அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 8 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஹெட்மயர், பட்லருடன் இணைந்து அதிரடியாக ஆடி அணியின் ஸ்கொரை உயர்த்தினார். கடைசி ஓவரை ஆகாஷ் தீப் வீச, அந்த ஓவரில் ஹெட்மயர், பட்லர் என இருவரும் அடித்து விளாசினார்கள். அந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் எடுத்தனர். 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது.