ருதுராஜிக்கு கேப்டன் பதவி கொடுத்ததில் ஆச்சிரியம் இல்லை… ரவிச்சந்திரன் அஸ்வின்!

Ravichandran Ashwin: நடப்பாண்டு ஐபில் தொடரின் முதல் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இன்று நடப்பு சாம்பியன் சென்னை அணியும், பெங்களூரு அணியும் பலப்பரீச்சை நடத்துகிறது. இதனால், இரு தரப்பு ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த சூழலில், எம்எஸ் தோனிக்கு இந்த சீசன் கடைசி சீசனாக இருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் இதனால் இந்த சீசன் பாதியில் புதிய கேப்டன் சென்னைக்கு நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன்பே சென்னை அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமினம் செய்யப்பட்டார்.

Read More – தோனிக்கு ‘நோ’.! CSKவின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.!

இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை அணியின் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்தது. சென்னை அணியின் எதிர்காலத்தை கருதி கேப்டன் பொறுப்பை இளம் வீரரான ருதுராஜிடம் ஒப்படைக்கப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்க்கு சிஎஸ்கே கேப்டன்சி கொடுத்ததில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை என்று நான் நினைக்கிறேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

Read More – சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டன் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம்!

சிஎஸ்கே புதிய கேப்டன் நியமனம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது,  இது தவிர்க்க முடியாத ஒரு முடிவு. அது ஒரு கட்டத்தில் புதிய கேப்டனை கொண்டுவர வேண்டியிருந்தது. எம்எஸ் தோனியை எனக்கு நன்றாக தெரியும். இதனால் புதிய கேப்டன் பொறுப்பு குறித்து ருதுராஜிடம் ஓராண்டுக்கு முன்பே தோனி தெரிவித்திருப்பார் என்று நம்புகிறேன். அணியை முன்னணியில் வைத்திருப்பது தோனியின் வழக்கம்.

அணியின் நலனைப் பற்றி அவர் தொடர்ந்து சிந்திப்பார். அதன் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் கொடுத்தார். ஆனால், சரியாக அமையவில்லை. இப்போது ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சென்னையின் அணியின் கேப்டன் பொறுப்பு கொடுப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்பே ருதுராஜிடம் தோனி பேசியிருப்பார் என்று நான் நினைக்கிறன்.  ஏனென்றால், ஒரு முடிவு எடுக்க உள்ளார் ஏன்றால் ஒரு வருடத்துக்கு முன்பே தோனி திட்டமிட்டு வருவார்.

Read More – CSKvsRCB : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்! இப்படி இருந்த சூப்பர் தான் ..!

அதன்படியே தற்போது நடந்து இருக்கும். இதில் ஆச்சரியப்பட வேண்டாம். ருதுராஜுக்கும் இது ஆச்சிரியமாக இருக்காது என்று நான் நினைக்கிறேன் என்றார். மேலும், சகோதரரே, நீங்கள் கேப்டனாக பொறுப்பேற்கப் போகிறீர்கள். இவற்றையெல்லாம் நீங்கள் செய்யலாம். நான் உங்களுடன் இருப்பேன், கவலைப்பட வேண்டாம் என்று ருதுராஜிடம் முன்கூட்டியே தோனி கூறியதாகவும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்