ICC : பும்ராவை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்த அஸ்வின் !

ICC : இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்தரன் அஸ்வின் தற்போது ICC-யின் டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சு தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 4-1 என்ற கணக்கில் அந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது.

Read More :-  IPL 2024 : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக மீண்டும் ரிஷப் பண்ட் ! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது சூழல் திறனால் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அதிலும் குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியானது அஸ்வினுக்கு 100-வது சர்வேதச டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியில் பந்து வீசிய அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும், 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

Read More :- IPL 2024 : தோனியும் இல்லை .. ரோஹித்தும் இல்லை ..! ஐபிஎல்லில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன் யார் தெரியுமா ?

இந்த 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்த நிகழ்வு (Five-wicket haul) என்பது சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் 36-வது முறையாக 5 விக்கெட்டுகள் எடுத்த நிகழ்வாகும்.  தற்போது, அஸ்வினின் இந்த டெஸ்ட் தொடரின் அபார விளையாட்டால் ICC-யின் டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சு தரவரிசையில் பும்ரா, ஹேசல்வுட்டை பின்னுக்கு தள்ளி 870 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் என தற்போது ஐசிசி X தளத்தில் அறிவித்துள்ளது.

Read More :- IPL 2024 : ‘ சிஎஸ்கே அணியில் இதுதான் குறை ‘ – ஆகாஷ் சோப்ரா ! 

இதற்கு முன் இவர் 2016ம் ஆண்டு இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசி 904 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தார். மேலும், இந்த 100-வது டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு விக்கெட் எடுத்திருந்தால் இலங்கை அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் சாதனையையும் முறியடித்திருப்பார். முத்தையா முரளிதரன் இதற்கு முன் அவரது 100-வது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சு தரவரிசை பட்டியல் :

    • ரவிச்சந்தரன் அஸ்வின் – 870 புள்ளிகள்
    • ஜோஷ் ஹேஸ்ல்வுட்       – 847 புள்ளிகள்
    • ஜஸ்பிரித் பும்ரா               – 847 புள்ளிகள்
    • ககிஸோ ராபாடா           –  834 புள்ளிகள்
    • பாட் கம்மின்ஸ்                – 820 புள்ளிகள்

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment