ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகம் – இன்று திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு நிகழ்சிகள் கலந்து கொள்வதற்காக திருப்பத்தூர் சென்ற நிலையில்,16,820 பயனாளிகளுக்கு ரூ.103.42 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் வழங்கினார்.மேலும்,திருப்பத்தூரில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தையும் முதல்வர் திறத்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து,வேலூரில் ரூ. 53.13 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் நேரில் சென்று திறந்து வைத்தார்.

அதன்பின்னர்,வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 62.10 கோடி செலவிலான முடிவுற்ற 17 பணிகளை திறந்து வைத்து,ரூ. 32.89 கோடி மதிப்பீட்டிலான 50 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.மேலும்,30,423 பயனாளிகளுக்கு ரூ. 360.53 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்நிலையில்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.மேலும், ராணிப்பேட்டையில் புதிய ஆட்சியர் அலுவலகத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

Leave a Comment