ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் – ராமதாஸ் கோரிக்கை

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 31,667 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 269 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய பாமக தலைவர் ராமதாஸ் அவர்கள், ‘ஆன்லைன் வகுப்புக்களால் பெற்றோர்கலுக்கும், மாணவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுவதாகவும், பள்ளிகள் சில மாதங்கள் தாமதமாக தொடங்குவதால், பாடங்களை படிக்காததால் எந்த பதக்கமும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து பாள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.