இந்திய வானிலை ஆய்வு மையத்தை பாராட்டிய உலக வானிலை ஆய்வு மையம்!

இந்திய வானிலை ஆய்வு மையத்தை பாராட்டிய உலக வானிலை ஆய்வு மையம்!

உம்பன் புயல் ஏற்பட்ட நேரத்தில் துல்லியமான தகவலை கணித்து வழங்கிய இந்திய வானிலை மையத்திற்கு உலக வானிலை ஆய்வு மையம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கடந்த மே மதம் கடலில் உருவாகிய உம்பன் புயல் நகர்வுக் குறித்த தகவல்கள் அத்தனையையும் கடந்த மே 16-ம் தேதி முதல் 21ம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் தான் துல்லியமாக கணித்து வழங்கியது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர். மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை மாறுபடும் உம்பன் புயலின் நகர்வு கரையை கடக்கும் நிகழ்வின் நேரம் மற்றும் மழை காற்றின் வேகம் ஆகியவற்றை டெல்லி வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.

துல்லியமான அறிவிப்புகளை இந்தியாவில் உள்ள ஆய்வு மையம் வழங்கியதால் மிகப்பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது எனவும், நன்றி தெரிவித்தும், இந்திய வானிலை ஆய்வு மையத்தை உலக வானிலை ஆய்வு மையம் பாராட்டி உள்ளது. மேலும் வெப்ப மண்டலச் சூறாவளி ஏற்படும் காலங்களிலும் தங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube