மாநிலங்களவை தேர்தல்.! சட்டசபை செயலாளர் தேர்தல் அதிகாரியாக நியமனம்..!

  • தமிழ்நாட்டில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் அடுத்தமாதம் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் தேர்தலுக்காக தமிழ்நாடு சட்டசபை செயலாளர் (கி.சீனிவாசன்) தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் மொத்தமாக 17 மாநிலங்களை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 55 மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால் அந்த இடங்களை நிரப்புவதற்காக  இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் அடுத்தமாதம் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 06-தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.16-ம் தேதி வேட்புமனு தாக்கல் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனு தாக்கல் திரும்பப்பெற 18-ம் தேதி என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு நடந்த 26-ம் தேதி மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்தத் தேர்தலுக்காக தமிழ்நாடு சட்டசபை செயலாளர் (கி.சீனிவாசன்) தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், கூடுதல் செயலாளர் (பா.சுப்பிரமணியம்)  தேர்தல் நடத்தும் உதவி  அதிகாரியாக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk