சோனியா காந்தி உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர். பதிய கோரி வழக்கு..! உள்துறைக்கு ,டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!

  •  சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி லாயர்ஸ் வாய்ஸ் என்ற அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
  • இந்த வழக்கை நீதிபதி உள்துறை அமைச்சகம் , டெல்லி அரசு மற்றும் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேசிய சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக்  கூறி லாயர்ஸ் வாய்ஸ் என்ற அமைப்பு அவர்களுக்கு மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் அடங்கிய அமர்வு உள்துறை அமைச்சகம் , டெல்லி அரசு மற்றும் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வருகின்ற  ஏப்ரல் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

லாயர்ஸ் வாய்ஸ் என்ற அமைப்பு கோரிய மனுவில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி,  ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானாத்துல்லா கான் ,வாரீஸ் பதான் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யவும் , வெறுப்பு பேச்சு தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர் எனப்து குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk