ரஜினி, கமலின் அரசியலை வெளுத்து வாங்கிய நடிகர்

நடிகர்கள் அரசியலுக்குள் குதிப்பது தற்போது சாதாரமாகிவிட்டது. ரஜினியும், கமலஹாசனும் தங்கள் பங்கிற்கு அரசியல் பேசி கொண்டிருக்கின்றனர். இதில் கமலஹாசன் மதுரையில் திடீரென தனது கட்சி கொடியையும், கட்சியின் பெயரையும் அறிவித்து அரசியலில் இறங்கிவிட்டார்.

ரஜினியின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அவர்களது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பல வருடங்களாக அதிமுகவில் இருக்கும் நடிகர் ராமராஜன் புதுச்சேரியில் அதிமுக கட்சி கூட்டத்தில் பேசும்போது, எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உடனே அரசியலில் இறங்கி முதலமைச்சராகவில்லை. அவர்கள் பல வருடங்களாக மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு பின்னர்தான் அரசியலில் சாதித்தனர்.

ஆனால் தற்போது உள்ள நடிகர்கள் உடனே கட்சி ஆரம்பித்து முதல்வராகி விடலாம் என கனவு காண்கின்றனர். ஆனால் மக்கள் பணியில் ஈடுபடாமல் எதுவும் நடக்காது. என அவர் பேசினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment