ராஜஸ்தான் அரசியல்.. ஜெய்ப்பூரில் நடைபெறும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்.!

ராஜஸ்தான் அரசியல்.. ஜெய்ப்பூரில் நடைபெறும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்.!

கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறிய ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் சேர்ந்தனர். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில்,  பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பான வழக்கின் விசாரணை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது. நாளை விசாரணையில் 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். இதனால், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க, பாஜக தனது எம்.எல்.ஏ.க்களை குஜராத்திற்கு மாற்ற செய்துள்ளது.

மேலும், 15 முதல் 20 பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என சதீஷ் பூனியா கூறினார். இந்நிலையில், நாளை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் என  பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் சதீஷ் பூனியா தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடர் வரை ராஜஸ்தானின் அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க இந்த கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும், பாஜக எம்எல்ஏக்கள் நாளை முதல் வரும்-14 வரை ஜெய்ப்பூரில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் தங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் வருகின்ற 14-ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>

Latest Posts

"விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது!"- பிரதமர் மோடி
தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை நாளை முதல் திறப்பு.!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி.!
சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை - மாநில அரசு
#BREAKING: வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!
அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து செயல்பட அதிபர் டிரம்ப் அனுமதி!
#BREAKING: எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. மாநிலங்களவை ஒத்திவைப்பு.!
காற்றழுத்த தாழ்வு பகுதி..நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.!
உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!