இளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….!

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள்,  தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நோக்கி சென்ற போது, சாலையோரம் இருந்த இளநீர் வியாபாரியிடம் இளநீர் வாங்கி பருகினார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது. அந்த வகையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள்,  தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நோக்கி சென்ற போது, சாலையோரம் இருந்த இளநீர் வியாபாரியிடம் இளநீர் வாங்கி பருகினார். அப்போது,  அவரிடம் வருவாய், குடும்ப சூழல் மற்றும் குழந்தைகளின் கல்வி செலவு ஆகியவற்றை கேட்டறிந்தார்.

பின் ஆலங்குளம் பிரச்சாரத்தில் பேசிய அவர், சிறு மற்றும் குறுந் தொழில்களின் முதுகெலும்பை ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு மூலம் முறித்து விட்டதாக குற்றசாட்டினார்.