ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரை 7ஆம் நாள்… கேரளா டூ கர்நாடகா.!

ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரை 7ஆம் நாள் தொடக்கத்தில்  இன்று கஜகூட்டம் பகுதியில் இருந்து பயணம் தொடங்கியுள்ளது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 3,570 கிமீ தூரத்தை 150 நாட்களில் கடக்கும் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி இன்று 7ஆம் நாளை தொட்டுள்ளது.

இந்த 7ஆம் நாள் பயணம் இன்று கேரளாவில், நேற்று நிறைவு பெற்ற கஜகூட்டம் பகுதியில் இருந்து இன்று பயணம் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை கேரளாவிற்குள் நுழைந்த ராகுல் காந்தி, அக்டோபர் 1ஆம் தேதி கர்நாடக எல்லையை தொட உள்ளார்.

பாரத் ஜோடோ யாத்ரா மூலம் கேரளாவில் 19 நாட்கள் பயணித்து ஏழு மாவட்டங்களை தொட்டு 450 கிலோமீட்டர்களைக் கடந்து கேரள மாநிலம் வழியாக கர்நாடகா மாநிலம் செல்ல உள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment