#BREAKING: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடையூறு – அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேர் கைது!

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட தொண்டர்கள் கைது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளில் சோதனையில் ஈடுபட்டு வருவதால், கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு தொண்டர்கள் திரண்டுள்ளனர். அப்போது, காவல்துறைக்கும், வீட்டின் முன்பு திரண்டுள்ள ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கோவையில் வேலுமணி வீட்டில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடையூறு செய்த அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் அம்மன் அர்ச்சுனன், கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி, ஏகே செல்வராஜ், பிஆர்ஜி அருண்குமார் மற்றும் ஜெயராம் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது. கோவை சுகுணாபுரத்தில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைநடைபெற்று வருகிறது.

எஸ்பி வேலுமணியின் வீட்டிற்கு செல்லும் இணைப்பு சாலைகளை காவல்துறையினர் தடுப்பு வைத்து அடைத்ததர்க்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தஞ்சமடைந்த எஸ்பி வேலுமணி ஆதரவாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூடியதால் கைது செய்யப்பட்டனர். இதனால் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment