PBKSvDC: சாம் கரண் அதிரடி… டெல்லியை வீழ்த்திய பஞ்சாப்..!

PBKSvDC இன்றைய 2-வது போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே சண்டிகரில் நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 33 ரன்களும் , அபிஷேக் போரல் 32* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். 175 இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான்,  ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.  ஆட்டம் தொடங்கிய முதல் சிறப்பாக அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 22 ரன்னில் இஷாந்த் சர்மா ஓவரில் போல்ட் ஆனார்.

அதே ஓவரில் மற்றொரு தொடக்க வீரர்  ஜானி பேர்ஸ்டோவ் 9 ரன்னில் இஷாந்த் சர்மாவிடம் ரன்அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய பிரப்சிம்ரன் சிங் வந்த வேகத்தில் 5 பவுண்டரி உட்பட 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா வந்த வேகத்தில் 9 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் சாம் கரண் மற்றும் லிவிங்ஸ்டன் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

அதிரடியாகவும், சிறப்பாகவும் விளையாடிய சாம் கரண் 39 பந்தில் அரைசதம் விளாசி 63 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.  மறுபுறம் இருந்த லிவிங்ஸ்டன் 38* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக பஞ்சாப் அணி 19.2 ஓவர் முடிவில் 6 விக்கெட்டைகளை இழந்து 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் குல்தீப் யாதவ், கலீல் அகமது தலா 2 விக்கெட்டையும், இஷாந்த் சர்மா விக்கெட்டை பறித்தார்.

author avatar
murugan