டெல்லியின் தலையீடு பஞ்சாபில் இருக்க கூடாது.! ராகுல் காந்தி கருத்து.!

டெல்லி கட்டுப்பாட்டில் பஞ்சாப் இருந்துவிட கூடாது. – பஞ்சாபில் ராகுல்காந்தி பேச்சு. 

பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,தற்போது பஞ்சாபில் தனது ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஒற்றுமை யாத்திரையில் பேசிய ராகுல்காந்தி, பஞ்சாப் அரசு, டெல்லி கட்டுப்பாட்டில் இயங்க கூடாது என குறிப்பிட்டார் அதாவது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. பகவந்த் மான் முதல்வராக இருக்கிறார்.

இதனை குறிப்பிட்டுதான் ராகுல் காந்தி, டெல்லி கட்டுப்பாட்டில் பஞ்சாப் இருந்துவிட கூடாது என கூறியுள்ளார். மேலும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மனதில் உள்ளதை முதல்வர் பகவந்த் மான் கேட்க வேண்டும். வேறு  யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் முதல்வர் மாறிவிட கூடாது.’ எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment