ஐபிஎல் தொடரின் மற்றும் ஒரு ரைவல்ரி போட்டி !! பஞ்சாப் – மும்பை இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகிறது

நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டி சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவேந்திரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதே போல எதிர்பார்ப்பு இந்த இரு அணிகளும் மோதும் பொழுது இருக்கும். அதே போல புள்ளி பட்டியலில் இந்த இரு அணிகளும் சமநிலையில் உள்ளனர். ஆனால் பஞ்சாப் அணி 8- வது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி 9- தாவது இடத்திலும் அதாவது ரன்ரேட் அடிப்படையில் ஒரு படி முன்னிலையில் பஞ்சாப் அணி உள்ளது.

தற்போது இருக்கும் இந்த இரு அணிகளையும் ஒப்பிட்டு பார்க்கையில் மும்பை அணி பஞ்சாப் அணியை விட சற்று பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இதனால் இந்த போட்டியை மும்பை அணி வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

நேருக்கு நேர் 

இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் தலா 31 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 15 போட்டிகள் பஞ்சாப் அணியும், 16 போட்டிகள் மும்பை அணியும் வெற்றி பெற்று உள்ளது. இந்த நேருக்கு நேர்  கணக்கை சரி செய்வதற்கு பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் கடுமையாக போட்டி இடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பார்க்கப்படும் வீரர்கள் 

பஞ்சாப் அணி  :

ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அசுதோஷ் சர்மா, சாம் குர்ரன், ஷஷாங்க் சிங், சிக்கந்தர் ராசா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

மும்பை அணி :

ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஷ்ரேயாஸ் கோபால், ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மத்வால்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.