புதுக்கோட்டை விபத்து! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா நமணசமுத்திரம் அருகே திருச்சி
காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (30.12.2023) அதிகாலை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து மூன்று வெவ்வெறு நான்கு சக்கர வாகனங்களில் வெவ்வேறு கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தவர்கள். தேநீர் அருந்துவதற்காக சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு தேநீர் அருந்தி கொண்டு இருந்துள்ளார்கள்.

தேநீர் அருந்திகொண்டிருந்தபோது, சிமெண்ட் ஏற்றிகொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிறுமி உள்பட 19 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி -பிரேமலதா விஜயகாந்த்..!

இது தொடர்பான வெளியான அறிக்கையில் ” புதுக்கோட்டை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் பலத்த காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும். பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.