மாஸ்க் அணியாவிட்டால் பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை – அபராதம் 200!

மாஸ்க் அணியாவிட்டால் பொது போக்குவரத்துக்கு மும்பையில் அனுமதி இல்லை ஆனால், அபராதம் 200 விதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது அரசாங்கம் மக்களுக்காக சில தளர்வுகளை அறிவித்திருந்தாலும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. மாஸ்க் அணியாமல் வெளியில் செல்லக்கூடாது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என சில நமது பாதுகாப்புக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மும்பையில் அதிகம் இருப்பதால் முகமூடி அணியாமல் பேருந்துகள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற பொது போக்குவரத்துக்கு வரக்கூடிய பயணிகளை அனுமதிக்க கூடாது என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அவ்வாறு முகமூடி இல்லாமல் வருபவர்களுக்கும் அனுமதி இல்லை என சுவரொட்டிகள் வைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது. மேலும் அதை மீறி போக்குவரத்தில் ஈடுபடுபவர்களுக்கு 200 டாலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் பிஎம்சி தெரிவித்துள்ளது.

author avatar
Rebekal