காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி.!

நாளை முதல் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் கூடுவதை தடுக்க சுற்றுலாத் தலங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டன. கடந்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அந்தவகையில் இன்று முதல் பல இடங்களில் சுற்றுலா தலங்கள், கடற்கரைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாளை முதல் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், கொரோனா நோய் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகள் உள்ளிட்ட சுற்றுலாதலங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டிருந்தது.

தற்போது தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி சுற்றுலா தலங்களை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழையகுற்றால அருவி ஆகியவற்றிற்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்