என்கவுண்டர் செய்யப்பட்ட 4 பேரின் உடல்களை பாதுகாக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு..!

  • என்கவுண்டர் செய்தது சட்டத்தை மீறிய செயல்  இதில் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதியிடம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
  • பிரேத பரிசோதனையை சி.டி. , பென்டிரைவில் வீடியோவாக பதிவு செய்து ஒப்படைக்க வேண்டும்.
  •  மாநில அரசு 4 பேரின் உடல்களை வருகின்ற  9-ம் தேதி வரை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என

தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரியங்காவின் செல்போன் மற்றும் சில பொருள்களை பிரியங்காவை கொன்ற இடத்திலே வைத்து இருப்பதாக குற்றவாளிகள் விசாரணையில் கூறினார்.

இதை தொடர்ந்து நேற்று நான்கு பேரையும் போலீசார் அழைத்து சென்றபோது  தப்ப முயன்றதாக கூறி போலீசார் சுட்டுக் கொன்றனர். இது சட்டத்தை மீறிய செயல் என்று இதில் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதியிடம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்று 4 பேரின் பிரேத பரிசோதனையை சி.டி. , பென்டிரைவில் வீடியோவாக பதிவு செய்து மெஹபூப்நகர் மாவட்ட முதன்மை நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் இன்று மாலை ஒப்படைக்க வேண்டும். மேலும் மாநில அரசு 4 பேரின் உடல்களைவருகின்ற  9-ம் தேதி வரை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

author avatar
murugan