உன்னாவ் பெண் உயிரிழப்பு ! தர்ணாவில் ஈடுப்பட்ட முன்னாள் முதல்வர்

உன்னாவ் பெண் உயிரிழப்பு ! தர்ணாவில் ஈடுப்பட்ட முன்னாள் முதல்வர்

  • உன்னாவ் என்னுமிடத்தில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
  • உன்னாவ் விவகாரம் தொடர்பாக அகிலேஷ் யாதவ் தர்ணாவில் ஈடுபட்டார்

உத்திர பிரதேச மாநிலத்தில்  உன்னாவ் என்னுமிடத்தில் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது இளம் பெண் புகார் அளித்தார்.பின்னர்  தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.பலத்த தீ காயங்களுடன் சிகிச்சைபெற்று வந்த அந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை  கண்டித்து உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ,சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தர்ணாவில் ஈடுபட்டார். உன்னாவ் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில்  நடவடிக்கை எடுக்கக் கோரி லக்னோவில் உள்ள சட்டப்பேரவைக்கு வெளியே சமாஜ்வாதி கட்சியினருடன் தர்ணாவில் ஈடுபட்டார் அகிலேஷ் யாதவ் .

இதையும் படியுங்கள்… உன்னாவ் பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு..!

Join our channel google news Youtube