சொத்து வரி அதிகரிப்பு .., அரசு கைவிட வேண்டும் – சசிகலா கோரிக்கை..!

திமுக அரசு சொத்து வரியை திடீரென உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சொத்து வரி குறைந்தபட்சம் 25% முதல் அதிகபட்சம் 150% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக அரசு சொத்து வரியை திடீரென உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது.

ஏழை, எளிய சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு சொத்துவரி உயர்வை கைவிட வேண்டும். இந்த சுமையை எவ்வாறு சமாளிக்க முடியும். கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு அரசு செய்யும் உதவி இதுதானா..?  எனவே சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

author avatar
murugan