5 புதிய நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு திட்ட வரைவு அறிக்கை-  நிர்மலா சீதாராமன்..!

நாடு முழுவதும் 5 புதிய நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.

இன்று 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.

  • இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும்.
  • எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • தொழில்நுட்ப ரீதியான வசதிகள் மற்றும் டிஜிட்டல் விஷயங்களில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • மேலும், ட்ரோன்  மூலம் விவசாய நிலங்களை அளப்பது மற்றும் விளைச்சல்களை  கணிப்பது  போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • நாடு முழுவதும் 5 புதிய நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
  • அதில், கோதாவரி-கிருஷ்ணா,  காவிரி- பெண்ணாறு திட்டங்களும் அடங்கும் என தெரிவித்துள்ளார்.
author avatar
Castro Murugan