பேராசிரியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடாது – தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவு

பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை கைப்பற்றக்கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவு.

பேராசிரியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடாது என மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மன அழுத்தத்தில் உள்ள பேராசிரியர்களுக்கு யோகா பயிற்சி தர வேண்டும் என்றும் பேராசிரியர்களின் தேர்வு, நியமனம், ஊதியம் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை எக்காரணம் கொண்டும் கைப்பற்றக்கூடாது. தனியார் பொறியியல் கல்லூரிகளை அடிக்கடி திடீர் ஆய்வுக்கு உட்படுத்தி அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DoTE) ஆணையிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment