22% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் – மத்திய குழுவினர் இன்று தமிழகம் வருகை

22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு இன்று தமிழகம் வருகிறது.

கடந்த 11-ஆம் தேதி, தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதத்திலிருந்து  22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய உணவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில், 22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு இன்று தமிழகம் வருகிறது. தமிழக அரசின் கோரிக்கை அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இக்குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment