சன்னிலியோனுக்கு போட்டியாக மாறிய பிரியா வாரியர்!

சமூக வலைதளங்களில் ஒரு ஆதார் லவ்’ என்ற மலையாள திரைப்படத்திலிருந்து ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல்  செமயாக டிரெண்டாகி வருகிறது. இந்த பாடலை 11,430,061  நபர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இப்பாடலில் பள்ளியில் படிக்கு ஸ்கூல் பெண் தனது முகபாவனைகளை குறும்புத்தனமாக மாற்றியிருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. இதன் மூலம் கேரளாவைச் சேர்ந்த பிரியா பிரஷாஷ் வாரியர் என்ற நடிகை பிரபலமாகி வருகிறார்.

ஒரு கண்ணசைவில் லட்சக் கணக்கான ரசிகர்களைப் பெற்று சமூகவலைத்தளங்களில் பிரபலமாகியுள்ள நடிகை பிரியா வாரியருக்கு மூன்றே நாட்களில் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் சுமார் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்கள் கிடைத்துள்ளனர்.

விரைவில் திரைக்கு வரவுள்ள Oru Adaaru Love என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்றுள்ள “மாணிக்க மலரே” என்ற பாடலில் 2 நிமிடங்களுக்கும் குறைவாக இடம்பெறும் பிரியா வாரியர்தான் கண்ணசைவில் லட்சக் கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். புருவத்தை அசைத்து ஒரு கண்வெட்டில் காதலைச் சொல்லும் அந்த காட்சிதான் இளைஞர்களின் நெஞ்சங்களில் நிறைந்து, சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.

பிரியா வாரியரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை முழுக்க முழுக்க ஆக்கிரமித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 9ந் தேதி வரை வெறும் 9 ஆயிரம் பேர் மட்டுமே பிரியா வாரியரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வந்தனர். ஆனால் மாணிக்க மலரே பாடல் வெளியான பிறகு, இன்ஸ்டாகிராமில் பிரியா வாரியரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 17 லட்சத்தை கடந்துள்ளது.

பிரியா வாரியரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. கடந்த 9ந் தேதி வரை வெறும் 9 ஆயிரம் பேர் மட்டுமே பிரியா வாரியரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வந்தனர். ஆனால் மாணிக்க மலரே பாடல் வெளியான பிறகு, இன்ஸ்டாகிராமில் பிரியா வாரியரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 17 லட்சத்தை கடந்துள்ளது.

 

சன்னி லியோன், காத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா, தீபிகா போன்ற பிரபல பாலிவுட் நடிகைகளைவிட கூகுளில் அதிகம் தேடப்படுபவராகவும் ஆகியிருக்கிறார் பிரியா வாரியர். இதேபோல உலக அளவில் கைலி ஜென்னர், கிறிஸ்டியானோ ரொனால்டோவைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஒரே நாளில் 6 லட்சத்து 6 ஆயிரம் பின்தொடர்பாளர்களை பெற்ற மூன்றாவது பிரபலம் என்ற பெயரையும் தட்டிச்சென்றுள்ளார், பிரியா வாரியர்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment