மத்திய பிரதேச கைதி ஒருவர் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்கிறார் -மனிதம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை சிறைக்கைதி ஒருவர் தானாக முன்வந்து  அடக்கம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்….

இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை நாட்டில் கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருகிறது, இந்நிலையில் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும்  இன்று மட்டும் 3,915 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷ்யாம் பாபா என்பவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை குற்றம் ஒன்றில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார், மேலும் அவர் நாட்டில் நிகழும் கொரோன உயிரிழப்புகளை கண்டு தானாக முன்வந்து உடல்கலை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அவர் இதன்மூலம் இந்தூரில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள தார் மாவட்டத்தின் உள்ளூர் மயானம் ஒன்றில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை ஆம்புலன்ஸ்களில் இருந்து இறக்கி, இறுதி சடங்கு செய்வதோடு உடலை சிதையில் அடுக்கி வைப்பது போன்ற வேலையை செய்துவருகின்றார்.

அவரின் இந்த சேவையை கருத்தில்கொண்டு அவர் விருப்பத்திற்கு இணங்க சிறை நிர்வாகம் அவருடைய பிணைக்காலத்தை மேலும் 2 மாதம் நீட்டித்துள்ளது.