#Breaking:முழு ஊரடங்கின்போது அம்மா உணவகங்கள் செயல்பட அனுமதி…!

#Breaking:முழு ஊரடங்கின்போது அம்மா உணவகங்கள் செயல்பட அனுமதி…!

முழு ஊரடங்கின்போது அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது அதிவேகமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன.இதன்காரணமாக,பல மாநிலங்கள் தற்போது முழு ஊரடங்கை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில்,தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக  வருகின்ற மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கின் போது அனைத்துதனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், ஐ.டி.நிறுவனங்கள்,பூங்காங்கள், அருங்காட்சியகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.எனினும், காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு ஊரடங்கு காலத்தில் தடை விதிக்கப்ட்டுள்ளது.நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.

தமிழகத்தில் வரும் திங்கள் அதிகாலை 4 மணி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பொதுமக்கள் முன்னேற்பாடுகளை செய்துகொள்ள இன்றும் நாளையும் அத்தியாவசிய கடைகள் இரவு 9 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தமிழக அரசு அறிவித்துள்ள உத்தரவின்படி,முழு ஊரடங்கின்போதும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.ஆனால்,சாலையோர உணவகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube