பிரதமர் வருகை; 22,000 போலீசார் பாதுகாப்பு.. ட்ரான்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை!

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார் குவிப்பு.

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 28, 29-ஆம் தேதிகளில் சென்னையில் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் இடம், சென்னை விமான நிலையம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போட அரசு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி மாலை சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர்,  மறுநாள் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.பிரதமரின் 2 நாள் சுற்றுப் பயணத்தையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேரு ஸ்டேடியம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment