பெண் ஒருவரின் துணிச்சலான செயல்-வைரலாகும் வீடியோ

டேராடூனில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுங்கத்துறை அதிகாரியை காப்பாற்றிய பெண்-வைரலாகும் வீடியோ

டேராடூனில் உள்ள லாச்சிவாலா சுங்கச்சாவடியில் சிமென்ட் ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து சுங்கச்சாவடி மீது மோதியது. இந்த சம்பவத்தில் சாவடியின் உள்ளே சிக்கிக்கொண்ட சுங்கத்துறை அதிகாரியை பெண் ஒருவர் துணிச்சலாக காப்பாற்றியுள்ளார்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரி ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய பெண்மணியின் துணிச்சலான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

author avatar
Varathalakshmi

Leave a Comment