ஜி20 மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை முதன் முதலாக சந்தித்த பிரதமர் மோடி.!

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ரிஷி சுனக் மற்றும் மோடி முதன்முறையாக சந்திப்பு.

இந்தோனேசியாவிலுள்ள பாலியில் இன்று (நவம்பர் 15) மற்றும் நாளை (நவம்பர்16) நடைபெறும் 17ஆவது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார்.

ஜி20 உறுப்பினர்களான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் , கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரிபப்ளிக் ஆஃப் கொரியா, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகளைச்சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ-பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரை ஏற்கனவே பிரதமர் மோடி சந்தித்து கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனையடுத்து பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடனான சந்திப்பு குறித்த புகைப்படத்தை பிரதமர்  அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இங்கிலாந்தின் பிரதமரான சமயத்தில் மோடி, ரிஷி சுனக்கிடம் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருந்தார். தற்போது அதன் பிறகு ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி சந்திப்பு நடைபெறுவது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar

Leave a Comment