இனி இவர்தான் பிரபலமான உலகத் தலைவர்..! மார்னிங் கன்சல்ட் ஆய்வு அறிக்கை..!

பிரதமர் மோடி மிகவும் பிரபலமான உலகத் தலைவராகிவிட்டார் என்று அரசியல் புலனாய்வு நிருவனம் நடத்திய கருத்துக்கணிப்பு கூறுகிறது.

ஆராய்ச்சி நிறுவனமான மார்னிங் கன்சல்ட் அரசியல் புலனாய்வு, உலகம் முழுவதும் உள்ள அரசாங்கத் தலைவர்களின் ஒப்புதல் மதிப்பீடுகளைக் கண்காணித்து வருகிறது. அந்த வகையில் அரசியல் புலனாய்வு நிறுவனம் ஆய்வு செய்த 22 நாடுகளில் அவர்களின் ஒப்புதல் மதிப்பீடுகளின் அடிப்படையில் பிரபலமாக இருக்கும் உலகத் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், 75% க்கும் அதிகமான ஒப்புதல் மதிப்பீட்டில் பிரதமர் மோடி மிகவும் பிரபலமான உலகத் தலைவர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

PM Modi 2

பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 68%, சுவிஸ் அதிபர் அலைன் பெர்செட் உள்ளிட்டோர் உள்ளனர். இந்த ஒப்புதல் மதிப்பீடுகள் ஜனவரி 31.01.2023 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் 18 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் ஏழு நாட்களில் அளிக்கும் மதிப்பீடுகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு பட்டியலை அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.

PM Modi tweet
<br >File Image

இந்த பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏழாவது இடத்தில் உள்ளார். 22 நாடுகளில், நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர், தென் கொரிய அதிபர் யூன் சியோக்-யூல் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கடைசி மூன்று இடங்களில் உள்ளனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment