இளையராஜாவின் இசையை மெய்மறந்து ரசித்த பிரதமர் மோடி..!

இளையராஜா மற்றும் அவரது இசை குழுவினர், நான் கடவுள் திரைப்படத்தில் இடம்பெற்ற ஹர ஹர மகாதேவ் பாடலை இசைக்க பிரதமர் மோடி மெய்மறந்து ரசித்தார். 

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனராஸ் பல்கலைக்கழகத்தில், காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் முருகன், இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இளையராஜா, தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை காசியில் நடத்த பிரதமர் மோடி எண்ணியது எண்ணி நான் வியக்கிறேன் என பிரதமர் மோடியை  பாராட்டி இருந்தார்.

அதனை தொடர்ந்து இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இளையராஜா மற்றும் அவரது இசை குழுவினர், நான் கடவுள் திரைப்படத்தில் இடம்பெற்ற ஹர ஹர மகாதேவ் பாடலை இசைக்க பிரதமர் மோடி மெய்மறந்து ரசித்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment