வெப்ப அலைகளையும் கையாள தயாராக வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக அரசு வரும்முன் காக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது என முதல்வர் பேச்சு. 

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் குழுவின் தலைவரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. தலைமை செயலக கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, சவுமியா சாமிநாதன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல்வர் உரை 

இந்த ஆலோசனை கூட்டத்தில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை கையாள்வது போல் வெப்ப அலைகளையும் கையாள தயாராக வேண்டும்.

வளர்ச்சிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல வளர்ச்சியும் காலநிலை மாற்றம் இரு கண்களை போன்றது. திமுக அரசு வரும்முன் காக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. கடல் அரிப்பைத் தடுக்க பனைமரம் நடும் திட்டம் தொடங்கப்படும்; காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment