மருத்துவமனைகளை தயார் படுத்துங்கள்.. இங்கு மாணவர்கள் கூடக்கூடாது – மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு!

கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கூட்டக்கூடாது என மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் மாணவர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து, பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கொரோனா பரவல் ஏற்படுமோ என்கிற அச்சம் நிலவி வரும் நிலையில், அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நாட்டில் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் சற்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சென்னை ஐஐடியில் மாணவர்கள் உள்பட 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்த நிலை மாறும் என்றும் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் பதற்றம் தேவையில்லை, முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்