முன்கூட்டியே விடுதலை?.. நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு 26-ல் விசாரணை!

முன்கூட்டியே விடுவிக்கக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு 26-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், நளினி, ரவிச்சந்திரன் தங்களை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்தனர். இந்த 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை.

இது தொடர்பாக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்பின் அடிப்படையில் தங்களையும் விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன், நளினி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் 26-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment